கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

வியாழன், 5 செப்டம்பர், 2013

நக்கீரன்

இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்குகிறது இந்தியா?
இலங்கைக்கு 2 போர்க்கப்பல்களை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளதாகவும், இந்த கப்பல்கள் கோவாவில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு, 2017–18ம் ஆண்டில் இந்த கப்பல்கள் இலங்கைக்கு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடல் எல்லையை பலப்படுத்த உதவுமாறு இலங்கை அரசு கேட்டுக்கொண்டதையடுத்து இந்த கப்பல்கள் அந்நாட்டிற்கு வழங்கப்பட இருக்கிறது.
ஏற்கனவே இந்தியாவில் உள்ள 4 தென்மாநிலங்களை தவிர மற்ற மாநிலங்களில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அத்துமீறி கைது செய்து வரும் சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவாக அந்நாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்க ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி நடவடிக்கை எடுத்தது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், மத்திய அரசு இலங்கை ராணுவத்திற்கு தற்போது போர்க்கப்பல்களை வழங்க இருப்பது அந்நாட்டு ராணுவத்துடனான தொடர்பை துண்டிக்காமல் பலப்படுத்தி வருவதையே காட்டுகிறது என்று தமிழ் உணர்வாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.