கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

விஸ்பரூபம்.. முஸ்லிம்களே தீர்வு என்ன ?


விஸ்பரூபம்.. முஸ்லிம்களே தீர்வு என்ன ? 


tnrzahir.blogspot.de த க வ ல் 
உணர்ச்சிகள் தூண்டபடுவதால் நீதியை மறந்து விட வேண்டாம் .!

கோயில் இடம் பெரும் காட்சியாக இருந்தால் மணி ஓசையும், தண்ணீர் தடாகமும், அமைதியான (?) பிராமன பூசாரியையும் காட்சிப்படுத்துவார்கள்.

கிருத்தவ தேவாலயமாக இருந்தால் அமைதியாக சூழலும், வெள்ளை ஆடையில் அமைதியான தோற்றத்தில் ஒரு பெரியவரும், பைபிலின் காட்சியம் சித்தரிக்கப்படும்.

இதுவே பள்ளிவாயலாக இருந்தால் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளுக்கு அடைக்களம் கொடுக்கும் இடமாகவும், திருமறைக் குர்ஆனை ஓதிக் கொண்டே பொது மக்களை கொலை செய்யும் மனிதர்களும் தான் காட்டப்படுவார்கள். ஏன் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வெறி? ஏன் இந்த துவேஷப் பார்வை?



ஆரம்ப காலத்தில் ஊதுபத்தி கொழுத்துபவர்களாகவும் தர்காக்களில் மந்திரிப்பவர்களாகவும், பேய் ஓட்டுபவர்களாகவும் காட்டப்பட்ட முஸ்லிம்கள் இன்று தெளிவாக தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். முஸ்லிம்களின் நல்ல பண்புகள் எதுவும் இதுவரைக்கும் சினிமாக்களில் காட்டப்பட்டதில்லை. இதற்கு எதிராக யாராவது பேசினால் கருத்து சுதந்திரத்தை எதிர்க்கிறார்கள் என்ற பெயரில் அதே முஸ்லிம்கள் மீது பழி போடப்படுவது வேடிக்கையாக இருக்கிறது

nilapennukku.com த க வ ல் 

 விஸ்வரூபம் – நல்லவேளை எனக்கு மதம்பிடிக்கவில்லை!

  காஷ்மீரில் இரு ராணுவத்தினரின் தலையை துண்டித்து பாகிஸ்தான் ராணுவத்தினர் எடுத்துக்கொண்டு சென்றபோது அதை எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒரு தலைவர், ஹைதிராபாத்தில் மஜ்லிஸ் கட்சி எம்.எல்.ஏ.வான ஓவாஸி பதினைந்து நிமிடத்தில் 100 கோடி இந்துக்களை கொன்றுவிடுவேன் என்று சொல்லும்போது எதிர்த்து போராட்டம் நடத்தாத ஒருவர் (ஆனால் அன்றே தன் எதிர்ப்பைக்காட்டி சமுதாயத்திற்கு தான் ஒரு உதாரணம் எனக் காட்டினார் அப்துல் கலாம்) விஸ்வரூபம் என்ற ஒரு சினிமாவில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாதியாக ஒரு முஸ்லீமை காட்டியதற்காக எதிர்க்கிறார். உடனே இதை ஆதரித்து ஒரு சாரரும், எதிர்த்து ஒரு சாரரும் சமூக வலைத்தளங்களிலும், இணைய தளங்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். இவர்களில் யாருமே படத்தைப் பார்க்கவில்லை, படத்தில் என்ன இருக்கிறதென்று தெரியாது, ஆனாலும் எதிர்ப்போம்/ஆதரிப்போம். இதை ஒரு இந்து/முஸ்லிம் பிரச்சினையாக மாற்றியதில்தான் அரசியல்வாதிகளின் சாதுர்த்தியம் ஒழிந்திருக்கிறது.


  இதைவிட ஒரு காமெடி என்னவென்றால் ஒருவர் இப்படிக் கமெண்ட் எழுதினார். “இந்தப்படத்தில் ஐயர் அசைவம் சாப்பிடுவது போல் காட்டியிருக்கிரார்கள் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும்” இதற்கு எங்கே போய்முட்டிக் கொள்வதென்றே தெரியவில்லை.

  இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் சொன்ன உடனே அரசு பட வெளியீட்டை இரண்டுவாரம் தள்ளிவைத்துவிட்டது. தொலைக்காட்சி உரிமைதான் விஜய் டி.விக்குப் போய்விட்டதே? இப்படி வெளியீட்டை தமிழக அரசு தடை செய்ததுதான் இன்றைய இத்தனை பிரச்சினைகளுக்கும் அஸ்திவாரம். 


  இத்தனைக்கும் விஸ்வரூபம் படத்தில் முஸ்லிமைத் தாக்கி எதுவும் இடம்பெறவில்லை. கமல்ஹாசனே முஸ்லிமாகத்தான் வருகிறார். இந்தக் கதையில் தமிழ்நாடே இடம்பெறவில்லை, அமெரிக்காவும்/ஆப்கானிஸ்தானுமே கதைக்களங்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான்களைப் பற்றிய கதை எடுக்கும்போது அவரது பெயரை நித்யானந்தா என்றா வைக்க முடியும்? மும்பை வெடிகுண்டை படமெடுக்கும்போது அஜ்மல் கசாப்பை புத்தமத சாமியாராகவா காட்ட முடியும்?
  
  இந்தியாவில் தணிக்கைத் துறை என்று இருக்கும்போது எதற்காக ஒவ்வொருவருக்கும் படத்தைப் போட்டுக்காட்ட வேண்டுமென்று தெரியவில்லை. பிறகு எதற்கு தணிக்கைத் துறை?

  சரி தமிழ்நாட்டில் தடை வாங்கியாயிற்று. கேரளாவில் படம் ஓடும்போது படத்தை தடை செய்ய வேண்டுமென்று கேரள முதல்வரை இவர்கள் ஏன் கோர வேண்டும்? படத்தில் மோசமான காட்சிகள் இருந்தால் அவர்களே நிறுத்திவிடப்போகிறார்கள், நிறுத்தச் சொல்லி கட்டாயப்படுத்துவது ஏனோ?
இப்படி ஏதேனும் பிரச்சினையைக் கிளப்பினால் தேர்தலில் மத ஓட்டுக்களை முழுவதும் பெற்றுக்கொள்ளலாம்.

  இத்தனைக்கும் முஸ்லிம் நாடான மலேசியாவில் தணிக்கை சான்றிதழ்பெற்று படம் வெளியானது. தமிழ்நாட்டில் படம் தடை செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டதை அறிந்ததும் உடனே அங்கும் ஒரே நாளுடன் நிறுத்திவிட்டனர்.
யோசிக்க வேண்டிய கேள்வி

  இந்து, முஸ்லிம், கிறித்துவர், புத்தம் பற்றியெல்லாம் படமெடுக்கக்கூடாது, சாதி பற்றியும் படமெடுக்கக்கூடாது, காதல் பற்றியும் படமெடுக்கக்கூடாது(அதில்கூட பெயர் வருமே?), மனிதர் பற்றியே படமெடுக்கக்கூடாது. அட நாய்களை வைத்துக்கூட படமெடுக்க முடியாது, என் வீட்டு நாயைப்போலவே வால் வளைந்திருக்கிறது, இது எங்கள் நாயை அவமானப்படுத்தும் செயல் என்றுகூறி தடை கோருவர்!

  சாதியும், மதமும், இனமும் ஒழிந்து நாம் அனைவரும் மனிதர் என்ற எண்ணம் வராதவரை நாலு முட்டாள்கள் கத்துவதைக் கேட்டுக்கொண்டு வெட்டிக்கொண்டும் குத்திக்கொண்டும் சாகும் அறிவிலிகள் இருக்கத்தான் செய்வார்கள்.

  காவியாக இருக்கட்டும் அல்லது பச்சையாக இருக்கட்டும் மக்களைத் தூண்டிவிட்டு பிழைப்பு நடத்துவதற்கு பதிலாக _______________________

நல்லவேளை எனக்கு மதம் பிடிக்கவில்லை! - மதம்பிடிக்கவில்லை!





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.