கலைக்கழகம்

கலைக்கழகம் - செய்திகள்

செவ்வாய், 3 ஜனவரி, 2012

Shakthi tv News

எரிகற்களை பார்வையிட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம்

இந்த வருடத்தில் எரிகற்கள் வீழ்வதை காண்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் இன்றிரவு இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ளது.

கொட்ரன்டிட்ஸ் quadrant-tides எனப் பெயரிட்டுள்ள எரிகல் பொழிவை இன்றிரவும் நாளை அதிகாலையும் பார்வையிட முடியுமென இலங்கை வான சாஸ்திரவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.

இன்று நள்ளிரவு 12 மணியின் பின்னர் இதனை அவதானிக்க முடியுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

இரவு வேளையில் நிலவு தென்படாத கரு மேகங்கள் சூழ்ந்த பகுதிகளில் எரிகற்கள் வீழ்வதனை பார்வையிட முடியும்.

வானத்தின் வட திசையில் மணித்தியாலத்திற்கு சுமார் 40 எரிகற்கள் வீழ்வதனை பார்க்க முடியுமென இலங்கை வான சாஸ்த்திரவியலாளர்கள் சங்கத்தின் தலைவர்குறிப்பிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.